பவானிசாகர் அணை நீர்மட்டம் 99.94 கன அடியாக சரிவு - Erode district news
🎬 Watch Now: Feature Video
வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால் பவானிசாகர் அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வந்தது. எனவே பவானிசாகர் அணை, தனது நீர்மட்ட கொள்ளளவான 104.5 அடியை எட்டி உள்ளது. இதனிடையே அணையில் போதுமான நீர் இருப்பு காரணமாக, கீழ்பவானி வாய்க்காலில் எள், கடலை ஆகிய பயிர்களின் 2ஆம் போக பாசனத்துக்கு ஜனவரி 21ஆம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது.
இதனால் அணைக்கு வரும் நீர்வரத்து அளவை விட நீர் திறப்பு அதிகரித்துள்ளது. இதன் காரணமாக அணையின் நீர்மட்டம் 101.76 அடியில் இருந்து, 99.94 கன அடியாக சரிந்தது. இந்த கீழ்பவானி வாய்க்கால் பாசனம் மூலம் திருப்பூர், ஈரோடு மற்றும் கரூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள ஒரு லட்சத்து மூவாயிரத்து ஐநூறு ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
இந்த நிலையில் இன்று (ஜனவரி 30) காலை நிலவரப்படி, 105 அடி நீர்மட்ட உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம் 99.94 அடியாகவும், நீர் வரத்து 512 கன அடியாகவும், நீர் வெளியேற்றம் கீழ்பவானி வாய்க்காலில் 1,800 கன அடியும், பவானிஆற்றில் 1,150 கன அடியும் என மொத்தம் 2,950 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. இதனால் அணையின் நீர் இருப்பு 28.68 சிஎம்சி ஆக உள்ளது.