ஒரு வானவில்லையே பார்த்தேன்.. அழகிய வண்ணங்களில் வட்டமடிக்கும் பறவைகளின் சிலிர்ப்பூட்டும் காட்சி!
🎬 Watch Now: Feature Video
Published : Nov 9, 2023, 4:55 PM IST
விழுப்புரம்: விழுப்புரத்தில் காலை நேரத்தில் தோன்றிய அழகிய வானவில்லின் ஊடே பறவைகள் பறந்து சென்ற காட்சியைக் கண்டு ரசித்த மக்கள் தங்களுடைய செல்போன்களில் படம் எடுத்தனர்.
வானவில் அடிக்கடி தோன்றுவது கிடையாது. பொதுவாக வானவில் காலை அல்லது மாலைப் பொழுதில் தோன்றுகிறது. சில நேரங்களில் வானவில் வட்ட வடிவில் பிரதிபலிக்கிறது. இந்த நிலையில், கடந்த இரண்டு நாட்களாக விழுப்புரம் மாவட்டத்தை ஒட்டியுள்ள பகுதிகளில் மழையும், குளிரும் சேர்ந்த காலநிலை நிலவி வருகிறது. இந்நிலையில், அதிகாலை வேளையில் நீல நிற வானில் பனி சூழ்ந்து குளிருடன் கூடிய மிதமான வெப்பம் நிலவியது.
அப்போது அனைவரும் சற்றும் எதிர்பாராத வகையில், வானில் மிகப்பெரிய வளவிலான வானவில் தோன்றியுள்ளது. இந்த அரிய நிகழ்வை வீதிகளில் சென்றவர்கள், வாகனங்களில் சென்றவர்கள் என அனைவரும் நின்று தங்களுடைய செல்போன்களில் படம் எடுத்துக் கொண்டனர்.
அரிய நிகழ்வாக தோன்றிய இந்த வானவில்லுக்கு இன்னும் அழகு சேர்க்கும் விதமாக, அதனை நோக்கி கூட்டம் கூட்டமாக பறவைகள் பறந்து சென்ற காட்சி பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருந்துள்ளது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே இந்த காட்சியை வியந்து பார்த்துள்ளனர்.