கும்பக்கரை அருவியில் வெள்ளப் பெருக்கு! 4வது நாளாக குளிக்க தடை! - தேனி மாவட்ட செய்திகள்
🎬 Watch Now: Feature Video
Published : Nov 6, 2023, 11:47 AM IST
தேனி: மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையால் கும்பக்கரை அருவியில் 4வது நாளாக சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவியின் நீர் பிடிப்பு பகுதிகளாக, மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் வட்டக்கானல், வெள்ள கெவி உள்ளிட்ட பகுதிகள் விளங்குகின்றன.
இப்பகுதிகளில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால், கடந்த இரண்டு தினங்களுக்கு முன் அருவியல் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி வனத்துறையினர் கும்பக்கரை அருவியில் குளிக்க தடை விதித்தனர்.
இந்த நிலையில் அருவியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் நிலையில், அருவியில் வரும் தண்ணீரின் அளவு அதிகரித்து உள்ளது. அருவியில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் கும்பக்கரை அருவியில் நீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனால் சுற்றுலா பயணிகளுக்கு குளிக்க விதிக்கப்பட்ட தடை 4வது நாளாக நீட்டிக்கப்படுவதாக வனத் துறையினர் அறிவித்து உள்ளனர். இந்த அறிவிப்பால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.