தண்ணீர் பாட்டிலுக்கு பணமா? திருப்பூரில் பார் ஊழியர்க்கு அடி, உதை; வைரலாகும் சிசிடிவி! - பார் ஊழியர் தாக்குதல்
🎬 Watch Now: Feature Video
திருப்பூர்: ஊத்துக்குளி தாலுகா, கவுண்டம்பாளையத்தில் டாஸ்மாக் பார் செயல்பட்டு வருகிறது. இந்த பாரில் நேற்றிரவு (ஜூலை 26) அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் மது அருந்த வந்துள்ளனர்.
இதனைத்தொடர்ந்து மது அருந்தி விட்டு பாரிலிருந்து வெளியேறியுள்ளனர். அப்போது தண்ணீர் பாட்டிலுக்குப் பணம் கொடுக்காமல் எடுத்துச்சென்றதாகத் தெரிகிறது. இதனை பாரில் வேலை செய்பவர்கள் தண்ணீர் பாட்டிலுக்குப் பணம் கேட்டபோது இரு தரப்பினருக்குமிடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இதனைத்தொடர்ந்து மேலும், சில நண்பர்களை வரவழைத்த இளைஞர்கள் நாங்கள் அனைவரும் உள்ளூர்காரர்கள் தான் எங்களிடமே பணம் கேட்பாயா? எனத் தகாத வார்த்தைகளால் பேசி கட்டை மற்றும் கல்லால் தாக்கியதாகத் தெரிகிறது. இதில் பார் ஊழியர்கள் செல்லத்துரை, அய்யாதுரை, குணா ஆகிய மூன்று பேரும் காயமடைந்தனர். அருகிலிருந்தவர்கள் உடனடியாக அவர்களை மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
மேலும், இந்த தாக்குதல் தொடர்பான சிசிடிவி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதனைத்தொடர்ந்து பார் ஊழியர்கள் அளித்த புகாரின் பேரி்ல், தாக்குதலில் ஈடுபட்டதாக சுமந்தர், வாசுதேவன், மற்றும் பழனி பாரதி, சல்மான்கான் ஆகிய நான்கு பேரைக் கைது செய்தனர். மேலும், சில பேரை ஊத்துக்குளி போலீசார் தேடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.