ஆரணியில் தரமற்ற சிமெண்ட் சாலை குறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரல் - arani road issue
🎬 Watch Now: Feature Video
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அடுத்த ஆரணியில் ரூ.5,20,000 மதிப்பில் போடப்பட்ட தரமற்ற சிமெண்ட் சாலை குறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானதால் பணிகளை மேற்கொண்ட ஒப்பந்ததாரர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆரணி நகராட்சியில் மொத்தம் 33 வார்டுகள் உள்ளன. இங்கு திமுகவைச் சேர்ந்த ஏசி மணி என்பவர் நகர மன்ற தலைவராக பதவி வகித்து வருகிறார். மேலும் ஆரணி பகுதியில் நகர்ப்புற சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் அனைத்து வார்டுகளிலும் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
குறிப்பாக ஆரணி 33 வது வார்டு மேனேஜர் முருகேசன் தெருவில் சாலை அமைக்கும் பணி நடைபெற்ற நிலையில் அப்பகுதியில் தரமற்ற சிமெண்ட் சாலை போடப்பட்டதால் சமூக ஆர்வலர்கள் சாலை அமைக்கும் வீடியோவை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வைரல் ஆக்கினர்.
இதனைத் தொடர்ந்து 5,20,000 மதிப்பில் போடப்பட்ட இந்த தரமற்ற சிமெண்ட் சாலை மக்களுக்கு பயன் பெறாத வகையில் இருக்கும் என்றும் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். எனவே இந்த தரமற்ற சிமெண்ட் சாலை பணியை செய்யும் ஒப்பந்ததாரர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் மீது கோரிக்கை விடுத்து உள்ளனர்.
இதையும் படிங்க:பல்லாவரம் அருகே ஊதுபத்தி தயாரிக்கும் தொழிற்சாலையில் தீ விபத்து!