அதிமுகவின் தூண்டுதலின் பேரில் பாலை கீழே ஊற்றி ஆர்ப்பாட்டம் செய்கின்றனர் - அமைச்சர் சா.மு. நாசர்

By

Published : Mar 17, 2023, 7:25 PM IST

thumbnail

திருவள்ளூர்: காக்களூரில் கிளை நூலக கட்டட அடிக்கல் நாட்டு விழாவில் தமிழ்நாடு பால்வளத்துறை அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் பங்கேற்றார்.  அப்போது செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், ''தமிழ்நாட்டில் எங்கேயும் பால் தட்டுப்பாடு ஏற்படவில்லை. தமிழ்நாடு முழுவதும் 9356 சங்கங்கள் உள்ளன. இதில் ஒரு சங்கம் மட்டும் நேற்று வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.  

இரண்டு மாதத்திற்கு முன்பு தான் மூன்று ரூபாய் பால் உற்பத்தி விலையை உயர்த்தினோம். மறுபடியும் பால் விலையை ஏற்ற வேண்டும் என்று கூறினார்கள். உங்களுடைய கோரிக்கையினை தமிழ்நாடு முதலமைச்சரிடம் கூறுவோம். அதன் பிறகு முடிவெடுப்போம் என்று கூறினோம்.  ஒரே ஒரு சங்கம் மட்டும் பாலை அனுப்ப மாட்டோம் என்று கூறினார்கள்.

ஆனால், ஏறக்குறைய வர வேண்டிய பால்கள் அனைத்தும் சரியான முறையில் ஒன்றியங்களில் இருந்து சீரான முறையில் வந்து கொண்டுள்ளது. 60 லட்சம் பாக்கெட்டுகள் ஒட்டு மொத்தம் தமிழ்நாடு முழுவதும் சீரான முறையில் விநியோகிக்கப்பட்டு வருகிறது.  

உற்பத்தி செய்யும் இடத்திலும் தங்கு தடை இல்லை; விநியோகம் செய்யும் இடத்திலும் தங்கு தடை இல்லை; சரியான முறையில் பயணித்துக் கொண்டிருக்கிறோம் என்று கூறினார். அதிமுக தூண்டுதலின்பேரில் ஒரு சில சங்கத்தினர் பாலை கீழே ஊற்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

ஒட்டுமொத்தமாக தமிழகத்திலிருந்து பால்கள் வந்து கொண்டே தான் இருக்கிறது. இங்கு தடை இல்லாமல் பால் உற்பத்தி நடைபெற்று வருகிறது” என்று பால்வளத்துறை அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் தெரிவித்தார்

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.