'சாதிய அமைப்புகளை அண்ணாமலை தூண்டுகிறாரா?' - முத்தரையர் முன்னேற்ற சங்கத்தலைவர் பேட்டி - சாதிய அமைப்புகள் கட்சி துவங்க தூண்டுகிறாரா அண்ணாமலை
🎬 Watch Now: Feature Video
திருச்சி: காமராஜர் என்றால் தும்பைபூ வெள்ளை வேட்டி சட்டை, எம்.ஜி.ஆர் என்றால் வெள்ளை தொப்பி, கருணாநிதி என்றால் கறுப்புக்கண்ணாடி, ஜெயலலிதா என்றால் புடவைக்கு மேலே அணியும் மேல்கோட்; இதேபோல் வீர முத்தரையர் முன்னேற்ற சங்கம் என நடத்தி வந்த கே.கே.செல்வக்குமார் என்றால் மஞ்சள் சட்டையும் ஜடா முடியும் சட்டென நினைவுக்கு வரும். அவர்தான் தற்பொழுது தமிழர் தேசம் கட்சி என்ற கட்சியைத் தொடங்கி இருக்கிறார்.
தேர்தல் காலங்களில் புற்றீசல் போல புதிய கட்சிகள் தொடங்கப்படுவதும் தேர்தல் முடிந்தபின் முடங்கிப்போவதும் வாடிக்கையான ஒன்று, ஆனால் சமீபத்தில் எந்த தேர்தலும் வராத நிலையில் திடீரென ஓர் அரசியல் கட்சியைத் தொடங்கி இருக்கிறார். திருச்சி செல்வகுமார் முத்தரையர் சமுதாயத்தைச் சார்ந்தவர் என்பதாலும்; தனக்கென ஊரெல்லாம் இளைஞர் படையை வைத்திருப்பவர் என்பதாலும் சற்றே எதிர்பார்ப்பு எகிறி இருக்கிறது. இந்நிலையில் செல்வகுமாருடன் திருச்சியில் இருந்து ஈடிவி பாரத் தமிழ்நாடு நேயர்களுக்காக ஒரு நேர்காணல்...
Last Updated : Feb 3, 2023, 8:23 PM IST