மறைந்த நடிகர் மாரிமுத்துவுக்கு அஞ்சலி.. நவதானியங்களை கொண்டு மரியாதை செலுத்திய மாணவி!
🎬 Watch Now: Feature Video
Published : Sep 11, 2023, 8:45 AM IST
ராணிப்பேட்டை: இயக்குநரும், நடிகருமான மாரிமுத்து (வயது 57) மாரடைப்பு காரணமாக கடந்த செப்டம்பர் 8ஆம் தேதி காலமானர். அவரது மறைவுக்கு திரையுலக பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து மாரிமுத்துவின் இறுதி சடங்கு அவரது சொந்த ஊரான பசுமலையில் கடந்த சனிக்கிழமை நடைபெற்றது.
அப்போது ஊர் பொதுமக்கள், உறவினர்கள் என பலரும் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். இதன்பின்னர் அவரது உடல் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு தகனம் செய்யப்பட்டது. மாரிமுத்துவின் திடீர் மரணம் திரையுலகினர் மட்டும் மல்லமல்லாது அவரது சின்னதிரை ரசிகர்கள் மத்தியிலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. மேலும் அவரது மறைவுக்கு ரசிகர்கள் பலரும் தங்களது இரங்கலை தெரிவித்தனர்.
இந்நிலையில் ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாப்பேட்டை அரசு பள்ளியில் பயின்று வரும் சாமுண்டீஸ்வரி என்ற மாணவி மறைந்த நடிகர் மாரிமுத்துவின் உருவத்தை பென்சிலில் வரைந்து நவதானியங்களைக் கொண்டு அலங்கரித்து தனது இரங்கலை தெரிவித்து உள்ளார். ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை காகிதக்கார தெருவில் வசிக்கும் ரமேஷ்- பத்மாவதி தம்பதியிர் மகளான சாமுன்டீஸ்வரி, அதே பகுதியில் உள்ள அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார்.
ஓவியம் வரைவதில் ஆர்வமுடைய சாமூண்டீஸ்வரி, மாரடைப்பால் உயிரிழந்த குணச்சித்திர நடிகர் மாரிமுத்துவின் உருவத்தை பென்சிலில் வரைந்து அரிசி, கம்பு, பருப்பு, கடுகு, உள்ளிட்ட பல்வேறு வகையான நவதானியங்களை கொண்டு அலங்கரித்து தனது இரங்கலை தெரிவித்து உள்ளார்.