ஆந்திராவில் பிரசவ வலியில் துடித்த கர்ப்பிணியை டோலி கட்டி தூக்கிச்செல்லும் அவலநிலை! - ஆந்திரா அனகாபள்ளி மாவட்டம்
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-15462944-thumbnail-3x2-andh.jpg)
ஆந்திரா மாநிலம், அனகாபள்ளி மாவட்டம், ஜாஜுலபண்டா கிராமத்தைச் சேர்ந்தவர் பங்கி சாந்தி. நிறைமாத கர்ப்பிணியான இவருக்கு நேற்று பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. சாலை வசதி இல்லாததால், சாந்தியை ரோல்குண்டா ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு 9 கி.மீ., தூரம் உறவினர்கள் டோலி கட்டி தூக்கிச் சென்றனர். பின் அங்கிருந்து நர்சிபட்டினம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து மேல் சிகிக்சைக்காக விசாகப்பட்டினம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், இன்று அதிகாலை சாந்திக்கு அழகிய பெண் குழந்தை பிறந்தது. இருவரும் நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். சாலை அமைத்து தரக் கோரி பல முறை மனு அளித்தும் அரசு நடவடிக்கை இல்லை. சம்பந்தப்பட்ட அலுவலர்கள் உடனடியாக நடவடிக்கை எடுத்துச் சாலை அமைத்து தர வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Last Updated : Feb 3, 2023, 8:23 PM IST