ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயிலில் அமித்ஷா சாமி தரிசனம்! - rameshwaram news
🎬 Watch Now: Feature Video
ராமநாதபுரம்: பாரதிய ஜனதா கட்சி மாநிலத் தலைவர் அண்ணாமலை தமிழ்நாடு முழுவதும் 234 தொகுதிகளுக்கு நடைபயனம் மேற்கொள்கிறார். அதற்கான துவக்க விழா பொதுக்கூட்டம் நேற்று (ஜூலை 28) மாலை ராமேஸ்வரத்தில் நடைபெற்றது. இதில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்று சிறப்புரையாற்றினார். பின்னர் தனியார் விடுதியில் அமித்ஷா தங்கினார்.
இந்த நிலையில், இன்று (ஜூலை 29) அதிகாலை 5.45 மணியளவில் ராமேஸ்வரத்தில் உள்ள அருள்மிகு ராமநாத சுவாமி திருக்கோயிலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சாமி தரிசனம் செய்தார். அவருக்கு சால்வை மற்றும் மாலை அணிவிக்கப்பட்டது. மேலும், அவருடன் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, மத்திய அமைச்சர் எல்.முருகன் உள்ளிட்டோர்களும் சாமி தரிசனம் செய்தனர்.
இதனையடுத்து காலை 11 மணிக்கு தனியார் விடுதியில் நடைபெறும் நிகழ்ச்சியில், மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் குறித்த நூல் ஒன்றை வெளியிடுகிறார். அதன் பின்னர் 11.30 மணியளவில் முன்னால் குடியரசுத் தலைவர் ஏபிஜே அப்துல் கலாம் இல்லத்திற்குச் சென்று அவர்கள் குடும்பத்தினரைச் சந்திக்கிறார்.