டி20 கிரிக்கெட்டை போன்று வரும் நாளில் ஜல்லிக்கட்டும் ரசிக்கும் விளையாட்டாக இருக்கும் - அமைச்சர் மூர்த்தி நெகிழ்ச்சி - beta
🎬 Watch Now: Feature Video
சென்னை: தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த தடை இல்லை என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்த நிலையில், உச்ச நீதிமன்றத்தில் சிறப்பான வாதத்தை எடுத்து வைத்த தமிழக முதலமைச்சருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்தித்து ஜல்லிக்கட்டு பேரவை உறுப்பினர்கள், நிர்வாகிகள் வீர விளையாட்டு சங்க நிர்வாகிகள் என அனைவரும் முதலமைச்சரை சந்தித்து நேரில் நன்றி தெரிவித்தனர்.
பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் மூர்த்தி, “தமிழகத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்த தடை இல்லை என உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு தமிழக மக்களுக்கு கிடைத்துள்ள சிறப்பான தீர்ப்பு. ஜல்லிக்கட்டு தமிழர்களின் உணர்வில் கலந்து இருக்கக்கூடிய ஒரு விளையாட்டு. ஜல்லிக்கட்டை தடைசெய்ய பீட்டா அனிமல் வெல்பர் போர்டு ஆகியவை உச்ச நீதிமன்றத்தில் ஜல்லிக்கட்டை தடை செய்ய வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
தமிழர்களின் உணர்வும் போராட்டமும் அலங்காநல்லூரில் ஆரம்பித்து மெரினா வரை நடைபெற்றது. தமிழக அரசின் சார்பில் தகுதியான வழக்கறிஞர்கள் நியமிக்கப்பட்டு உரிய ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டதன் மூலம் இந்த வெற்றி கிடைத்துள்ளது. இந்த உரிமையை தமிழக மக்களுக்காக முதலமைச்சர் பெற்று தந்து உள்ளார். இந்த தீர்ப்பை கொண்டாடக் கூடிய வகையில் முதலமைச்சரின் அறிவுறுத்தலின்படி வெற்றி விழா வருகிற ஜனவரி மாதம் நடைபெறக்கூடிய ஜல்லிக்கட்டுப் போட்டியை பிரமாண்டமாக நடத்தப்படும்’’ எனத் தெரிவித்தார்.
தமிழகத்தின் பிற பகுதிகளிலும் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்துவது தொடர்பாக அரசு அதிகாரிகள் மற்றும் சட்ட வல்லுநர்களுடன் கலந்து ஆலோசித்து அரசு நல்ல முடிவு எடுக்கும் எனவும் அவர் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து முன்னதாக அவர், “ஜல்லிக்கட்டுக்காக அலங்காநல்லூரில் பிரமாண்டமாக அரங்கம் தயாராகி வரும் நிலையில் ஜல்லிக்கட்டுப் போட்டியும் டி20 கிரிக்கெட் விளையாட்டு போன்று வரும் நாளில் ரசிக்கும் விளையாட்டாக இருக்கும்” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: சேர்மனை உள்ளே வைத்து பூட்டிய கவுன்சிலர்கள்! செங்கோட்டையில் நடந்தது என்ன?