Kodiveri Helicam Shot: கொடிவேரி அணையில் இருந்து பிரமாண்டமாகப்பாய்ந்தோடும் 'பவானி நதி' - கொடிவேரி அணை
🎬 Watch Now: Feature Video
ஈரோடு: நீலகிரி மற்றும் பவானிசாகர் அணையின் நீர் பிடிப்புப்பகுதிகளில் மழை பெய்து வருவதால் மாயாற்றின் வழியாக பவானிசாகர் அணை முழுக்கொள்ளளவை எட்டியதால் அணைக்கு வரும் உபரி நீர் முழுமையாக பவானி ஆற்றில் வெளியேற்றப்படுகிறது. பவானி ஆறு வழியாக வெளியேற்றப்படும் 25 ஆயிரம் கன அடி உபரிநீர் கொடிவேரி அணையில் இருந்து பாதுகாப்பு தடுப்பு கம்பியைத்தாண்டி, வெளியேற்றப்படுவதால் பொதுப்பணித்துறையினர் கொடிவேரி அணைக்கு 6ஆவது நாளாக சுற்றுலாப் பயணிகள் செல்லத் தடை விதித்துள்ளனர்.
கொடிவேரி அணை மூடப்பட்டு உள்ளதால் சுற்றுலாப் பயணிகள் பாலத்தின் மீது நின்று செல்ஃபி எடுத்தும், அங்கு விற்கப்படும் தின்பண்டங்களை வாங்கி உண்டும் வருகின்றனர். கொடிவேரி அணையில் இருந்து நீர் ஆர்ப்பரித்து செல்லும் பிரத்யேக ஏரியல்வியூ காட்சி...
Last Updated : Feb 3, 2023, 8:26 PM IST