Aditya L1: ஆதித்யா வெற்றியை கொண்டாடும் சிறார்கள்!
🎬 Watch Now: Feature Video
Published : Sep 2, 2023, 11:05 PM IST
திண்டுக்கல்: கடந்த 23ஆம் தேதி உலகில் முதல் நாடாக நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக சந்திராயன்-3 விண்கலம் அனுப்பப்பட்டு வெற்றிகரமாக ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது. அதனைத்தொடர்ந்து சூரியனைப் பற்றி ஆய்வு செய்வதற்காக முதல்முறையாக இந்தியாவில் இருந்து ஆதித்யா -L1 என்ற விண்கலம் இன்று (செப்டம்பர்.2) ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் பாய்ந்தது.
அதாவது, பூமியிலிருந்து சுமார் 15 லட்சம் கிலோ மீட்டர் தொலைவில் நிலைநிறுத்தப்படும் இந்த செயற்கைக்கோள், சூரியனில் இருந்து வெளிவரக்கூடிய கதிர்கள் மற்றும் சூரியனின் வெளிப்புற கரோனா குறித்தும் சூரியனில் ஏற்படும் மாற்றங்கள் குறித்தும் இடைவெளி இன்றி தொடர்ந்து ஆய்வுகளை மேற்கொள்ளும். பின்னர், அங்கிருந்து பூமிக்கு செயற்கைக்கோளின் பதிவு செய்யக்கூடிய படங்களை அதிவேகமாக அனுப்பி வைக்க உள்ளது.
அவ்வாறு அனுப்பி வைக்கப்படும் படங்களை வைத்து பல கேள்விகளுக்கு பதில்கள் மற்றும் ஆராய்ச்சிகள் தொடரப்படும் எனவும் பிரபஞ்சம் தோன்றியது எப்படி உள்ளிட்ட பல்வேறு அரிய கேள்விகளுக்கு பதில் அளிக்கும் விதமாக இருக்கும்.
நொடிக்கு நான்கு புகைப்படங்கள் வரை, பூமிக்கு இந்த செயற்கைக்கோளிலிருந்து அனுப்பி வைக்கப்படும் எனவும் ஆதித்யா செயற்கைக்கோளிலிருந்து வரக்கூடிய படங்கள் மற்றும் தகவல்களை வைத்து பல்வேறு ஆராய்ச்சிகளும் தொடர் கண்காணிக்கும் என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில், விண்ணில் செலுத்தப்பட்ட விண்கலம் குறித்து காணொளி மூலம் கொடைக்கானல் பள்ளி மாணவ மாணவிகளுக்கு அப்சர்வேட்டரி வான் இயற்பியல் ஆய்வு மையத்தில் காணொளி மூலம் காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து சூரியனில் நிகழும் நிகழ்வு குறித்து மாணவ மாணவியர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது. வெற்றிகரமாக விண்ணில் ஆதித்யா -L1 செலுத்தப்பட்டதை தொடர்ந்து பள்ளி கல்லூரி மாணவ மாணவியர் தேசிய கொடியை அசைத்தும், கேக் வெட்டியும் விமர்சையாக கொண்டாடினர்.