Actor Yogi Babu : திருசெந்தூர் முருகன் கோயிலில் நடிகர் யோகி பாபு சாமி தரிசனம்! - Avani festival
🎬 Watch Now: Feature Video
Published : Sep 11, 2023, 10:17 AM IST
தூத்துக்குடி: அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சாமி கோயில் உலக பிரசித்தி பெற்றது. இக்கோயிலுக்கு திரையுலக பிரபலங்கள், இயக்குநர்கள் ஆகியோர் வந்து சாமி தரிசனம் செய்வதை வழக்கமாக கொண்டு உள்ளனர். திருசெந்தூர் சுப்பிரமணிய சாமி கோயிலில் தற்போது ஆவணி திருவிழா நடைபெற்று வருகிறது.
ஆவணித் திருவிழாவில் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான சாமி சண்முகர் சிவப்பு சாத்தி கோலத்தில் எழுந்தருளி, வீதி உலா வரும் நிகழ்ச்சி நேற்று (செப். 10) மாலை நடைபெற்றது. இந்த நிலையில் நகைச்சுவை நடிகர் யோகி பாபு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு வந்து, மூலவர், சத்ரு சம்ஹார மூர்த்தி, வள்ளி தெய்வானை, பெருமாள் ஆகிய சன்னதிகளில் சாமி தரிசனம் செய்தார்.
நடிகர் யோகி பாபு கோயிலுக்கு வந்ததைப் பார்த்த ரசிகர்கள் அவருடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். இந்த நிலையில் நடிகர் யோகி பாபு கோயில் தூய்மை பணியாளர்கள் உள்ளிட்டோருடன் கைகுலுக்கி நலம் விசாரித்தார். இது குறித்த காணொலி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.