DD Returns: "டிடி படம் மூலம் ஆன்லைன் சூதாட்டங்களை தவிர்க்க அறிவுரை" - நடிகர் சந்தானம் - actor Santhanam advice for fans
🎬 Watch Now: Feature Video
சென்னை: தமிழ்நாடு முழுவதும் நடிகர் சந்தானத்தின் புதிய திரைப்படமான டிடி ரிட்டர்ன்ஸ் திரைப்படம் வெளியாகி உள்ளது. சந்தானத்தின் ரசிகர்கள் காலை முதல் திரையரங்கு வாயிலில் படம் வெளியானதையொட்டி பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கி கொண்டாடி வருகின்றனர்.
அதனைத்தொடர்ந்து, சென்னை குரோம்பேட்டையில் உள்ள வெற்றி திரையரங்கில் சந்தானம் தனது ரசிகர்களுடன் அமர்ந்து திரைப்படத்தைப் பார்த்தார். திரைப்படத்தைப் பார்த்த பின் வெளியே வந்த நடிகர் சந்தானம் செய்தியாளர்களிடம் கூறியதாவது, "அனைத்து ரசிகர்களும் பார்க்கக்கூடிய குடும்பப் பாங்கான திரைப்படம்.
அதே போல சந்தானத்தின் காமெடியை மீண்டும் இதில் பார்க்கலாம். மேலும் தனது ரசிகர்களுக்கு திரைப்படம் மூலம் ஆன்லைன் சூதாட்டங்களைத் தவிர்க்க வேண்டும். நல்ல விளையாட்டுகளை விளையாட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது" என்று தெரிவித்தார். இதுக்கு முன்னர் திரைப்படம் பார்க்க வந்த சந்தானத்தின் ரசிகர்கள் 50 அடி உயர பேனருக்கு பால் அபிஷேகம் செய்தனர். முதல் காட்சி அனைத்தையும் குறவர் மக்களுக்கு, அவரது ரசிகர்கள் இலவசமாக டிக்கெட்களை வாங்கி வழங்கினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.