திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோயிலில் நடிகர் தியாகராஜன் குடும்பத்துடன் சாமி தரிசனம்! - Tirukadaiyur
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/16-08-2023/640-480-19276416-thumbnail-16x9-prasanth.jpg)
மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுகா, திருக்கடையூரில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான தேவாரப் பாடல் பெற்ற அபிராமி சமேத அமிர்தகடேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. பக்தர் மார்க்கண்டேயனுக்காக சிவபெருமான் காலசம் ஹாரமூர்த்தியாக எழுந்தருளி எமனை காலால் எட்டி உதைத்து சம்ஹாரம் செய்தது உள்ளிட்ட பல்வேறு புராண நிகழ்வுகளை உள்ளடக்கிய உலகப் புகழ் பெற்ற திருத்தலமாக இந்த கோயில் விளங்குகிறது. அட்ட வீரட்டடான ஸ்தலங்களில் ஒன்றாகவும் திகழ்ந்து வருகிறது.
இந்த ஸ்தலத்தில் சிறப்பு ஹோமம் செய்து சுவாமி அம்பாளை வழிபட்டால் நீண்ட ஆயுள் கிடைக்கும் என்பது ஐதீகம். அதனால் நாள்தோறும் இங்கு ஏராளமான பக்தர்கள் வந்து செல்கிறார்கள். இந்நிலையில், திரைப்பட இயக்குனரும் நடிகருமான டி.ஜி தியாகராஜன் மற்றும் நடிகர் பிரசாந்த் ஆகியோர் குடும்பத்தினருடன் கோயிலுக்கு வந்தனர்.
அதனை தொடர்ந்து கோயிலுக்குள் சென்ற திரைப்பட இயக்குனரும் நடிகருமான டி.ஜி தியாகராஜன் மற்றும் நடிகர் பிரசாந்த் குடும்பத்தினருடன் ஸ்ரீ கள்ளவாரண விநாயகர், சுவாமி, ஸ்ரீ அமிர்தகடேஸ்வரர், காலசம்ஹாரமூர்த்தி மற்றும் ஸ்ரீ அபிராமி அம்பாள் சன்னதிகளுக்கு சென்று சிறப்பு பூஜைகள் செய்து தரிசனம் செய்தனர். முன்னதாக காமெடி நடிகர் தியாகு தனது குடும்பத்தினருடன் வந்து சாமி தரிசனம் செய்து இருந்தார்.