கோவையில் ஜி.வியின் ‘ஆயிரத்தில் ஒருவன்’ இசை நிகழ்ச்சி - Aayirathil oruvan music program logo
🎬 Watch Now: Feature Video
கோயம்புத்தூர்: தனியார் கல்வி குழுமம் மற்றும் எம்.கே.என்டர்டைன்மென்ட் இணைந்து நடத்தும் ‘ஆயிரத்தில் ஒருவன்’ இசை கச்சேரி வருகிற மே 27ஆம் தேதி கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கொடிசியா மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த இசை நிகழ்ச்சியில் இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி. பிரகாஷ்குமார் இசைக் கச்சேரி நடத்துகிறார். இந்த நிலையில் இன்று (மார்ச் 11) கோவை புதூரில் உள்ள தனியார் கல்லூரியில், அதற்கான லோகோ லான்ச் மற்றும் டிக்கெட் அறிமுகம் விழா நடைபெற்றது.
இந்த நிகழ்வில் தனியார் கல்லூரி குழுமத்தின் நிர்வாக இயக்குநர் மலர்விழி மற்றும் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். முன்னதாக மாணவர்களுடன் கலந்துரையாடிய ஜி.வி.பிரகாஷ்குமார், “நான் பள்ளிப் படிப்பில் தேர்ச்சி பெற்று விடுவேன். அதேபோல்தான் கல்லூரியிலும் இருந்தேன். எனக்கு அனைத்து கலைஞர்களையும் பிடிக்கும்.
என்னுடைய செலிபிரிட்டி மாணவர்கள்தான். ‘சிக்கு புக்கு’ என்ற பாடல் மூலம் எனது வாழ்க்கையைத் தொடங்கினேன். இந்த நிலையில் ஆயிரத்தில் ஒருவன் நிகழ்ச்சி கொடிசியா மைதானத்தில் வருகிற மே 27ஆம் தேதி நடைபெறுகிறது. எனவே நாம் அங்கு சந்திப்போம்” என தெரிவித்தார். இந்த உரையாடலின் இடையே சில பாடல்களையும் ஜி.வி. பிரகாஷ்குமார் பாடினார்.