Aadi Krithigai: ஜலகாம்பாறை முருகன் கோயில் ஆடிக் கிருத்திகை விழா: திரளான பக்தர்கள் பங்கேற்பு! - ஆடி கிருத்திகை விழா
🎬 Watch Now: Feature Video
திருப்பத்தூர் மாவட்டம், ஜலகாம்பாறை நீர் வீழ்ச்சியில் பிரசித்திப்பெற்ற முருகன் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் வருடம்தோறும் ஆடி மாதத்தில் ஆடிக் கிருத்திகையில் ஜலகாம்பாறை முருகனுக்கு சிறப்பு வழிபாடுகள் நடத்துவது வழக்கம். இந்த நிலையில் ஆடி கிருத்திகையான இன்று (ஆக.09) முருகருக்கு அலங்காரம் செய்து அபிஷேகங்கள் நடைபெற்றன.
முருகனுக்கு மஞ்சள், பால், சந்தனம், திருநீறு உள்ளிட்டப் பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து, வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இந்த நிகழ்வில் திருப்பத்தூர் மாவட்டம் மட்டுமின்றி தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வரிசையில் நீண்ட நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
இந்த விழாவில் சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் அழகு குத்தியும், காவடி எடுத்தும் சென்றனர். மேலும், சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு முருகனின் அருள் பெற்றனர். மேலும், கோயில் விழாவில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் கோயில் நிர்வாகத்தின் சார்பில் அன்னதானமும் வழங்கப்பட்டது. ஆடி கிருத்தகையான இன்று முருகனை தரிசிக்க சுமார் 20ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வருவார்கள் என கோயில் நிர்வாகத்தின் சார்பில் எதிர்பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: Aadi Krithigai: பழனி முருகன் கோயிலில் குவிந்த பக்தர்கள்!