விவசாய நிலங்களில் சுற்றித் திரியும் காட்டு யானை - பொதுமக்கள் பீதி! - விவசாய நிலத்தில் சுற்றித் திரிந்த காட்டு யானை
🎬 Watch Now: Feature Video
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த ஆலங்காயம் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை காட்டு யானை உமையப்ப நாயக்கணுர், அருணாசலம் கொட்டாய் வழியாக ஊருக்குள் புகுந்தது. பின்னர், பழனி என்பவருக்குச் சொந்தமான விவசாய நிலத்தில், பயிரிட்டு இருந்த நெற்பயிரை சேதம் செய்தது.
மேலும், கடந்த சில நாட்களாக முகாமிட்டு அதே பகுதியில் சுற்றித் திரியும் ஒற்றை யானையால் விவசாய நிலங்கள் சேதம் அடைந்து வருகிறது. தொடர்ந்து இதேபோல் காட்டு யானை விவசாய நிலங்களை சேதம் செய்து வருவதால் விவசாயிகள் பெரும் வேதனையில் உள்ளனர்.
தொடர்ந்து, ஊருக்குள் புகுந்து வரும் காட்டு யானையால் கிராம மக்கள் பீதியில் உள்ளனர். கிராம மக்களையும், விவசாயிகளையும் அச்சுறுத்தி வரும் ஒற்றை காட்டு யானையை வனப்பகுதிக்குள் விரட்ட வனத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் மற்றும் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: அட.. கடவுளே இவருக்கு வந்த சோதனை! - சாலை பள்ளத்தை சீரமைக்கும் நடிகர் அர்னால்டு!