Viral Video - சாலையில் சென்ற வாகன ஓட்டிகளை விரட்டிய காட்டு யானை - சாலையில் சென்ற காட்டு யானை
🎬 Watch Now: Feature Video
நீலகிரி: கோத்தகிரி மலைப்பாதையில் சமீப நாட்களாக யானைகள் நடமாட்டம் அதிகமாக காணப்பட்டு வருகிறது. கடந்த வாரம் முள்ளூர் பகுதியில் தேயிலைத் தோட்டத்திலிருந்து வெளியேறிய காட்டு யானை சாலையைக் கடக்க முற்பட்டபோது வாகன ஓட்டிகள் புகைப்படம் எடுத்து இடையூறு செய்தனர். அப்போது யானை அவர்களை துரத்திய சம்பவம் பரபரப்பினை ஏற்படுத்தியது.
இதனிடையே நேற்று மாலை தட்டப்பள்ளம் பகுதியில் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றைக்காட்டு யானை சாலை ஓரத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஜீப்பை திடீரென தாக்கியது. வாகனத்தில் இருந்தவர்கள் அச்சத்துடன் வாகனத்தை எடுத்துச்சென்றனர். இதில் நல்வாய்ப்பாக அவர்கள் உயிர் தப்பினர். இரவு இதேபோல் கோத்தகிரி - மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் உள்ள காட்சி முனைப்பகுதியில் நீண்ட நேரமாக ஒற்றைக்காட்டு யானை மேய்ச்சலில் ஈடுபட்டது.
இதனால், இருபுறமும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. அப்போது சாலை வழியாக சென்ற இருசக்கர வாகன ஓட்டிகள் யானையைக் கடந்து செல்ல முயன்றபோது யானை ஆக்ரோஷம் அடைந்தது. இதையடுத்து, இருசக்கர வாகனத்தில் சென்ற இருவரில் ஒருவர், கீழே இறங்கி ஓடிவிட மற்றொருவர் உடனடியாக இருசக்கர வாகனத்தை திருப்பி தப்பினார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க: Dantewada: தாந்தேவாடா மாவோயிஸ்டு தாக்குதல் வீடியோ வெளியானது