'வாடி ராசாத்தி' கல்லூரி மாணவிகளுடன் நடனமாடிய சேலம் துணை மேயர்! - சேலம் மாநகராட்சி
🎬 Watch Now: Feature Video
சேலம்: சர்வதேச மகளிர் தினத்தையொட்டி, சேலம் மாநகரின் பல்வேறு பகுதிகளில் நேற்று (மார்ச் 8) மகளிர் தின சிறப்பு நிகழ்ச்சிகள் கோலாகலமாக நடத்தப்பட்டன. கல்லூரி நிறுவனங்கள் தொடங்கி அரசு அலுவலகங்கள் வரை, பணிபுரியும் பெண்களைக் கௌரவப்படுத்தும் வகையில் சமூக ஆர்வலர்கள் சார்பில் பல இடங்களில் பாராட்டுக்கள் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டது.
அதன் ஒரு பகுதியாகச் சேலம் அம்மாபேட்டை பகுதியில் உள்ள தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவிற்குச் சிறப்பு அழைப்பாளராகச் சேலம் மாநகராட்சி துணை மேயர் சாரதா தேவி கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் மாணவிகள் துணை மேயரை தங்களுடன் சேர்ந்து நடனமாட அழைத்தனர். அதனை மறுக்காமல் துணை மேயர் சாரதா தேவி மாணவிகளுடன் கலகலப்பாக நடனமாடினார்.
இதில், ஜோதிகாவின் வாடி ராசாத்தி பாடளுக்கும், ஆனந்த யாழை மீட்டுகிறாய் பாடளுக்கும் ரோஜாப்பூவை கையில் வைத்துக்கொண்டு மாணவிகளுடன் இணைந்து துணை மேயர் சாரதா தேவி நடனமாடிய ஆடிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.