திடீரென வீட்டில் பற்றி எரிந்த தீ; ஒன்று கூடி அணைத்த பொதுமக்கள்! - Periyakulam Tenkarai Police
🎬 Watch Now: Feature Video
தேனி: பெரியகுளம் நகராட்சிக்கு உட்பட்ட தென்கரை இடுக்கடி லாட் தெருவில் உள்ள நல்லமணி என்பவரது வீடு திடீரென தீப்பற்றி எறிய துவங்கியது. சற்றும் எதிர்பாராத நிலையில் தீ மளமளவென வீடு முழுவதும் பரவிய நிலையில் வீட்டில் இருந்த நல்லமணி மற்றும் அவரது குடும்பத்தினர் உடனடியாக வீட்டை விட்டு வெளியேறியதால் தீ விபத்தில் சிக்காமல் தப்பித்தனர்.
இதனை அறிந்த அப்பகுதி மக்கள் உடனடியாக வீட்டின் பின்புறம் உள்ள பக்கத்து வீட்டின் வழியாக மேலிருந்து நீரை ஊற்றி தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர். மேலும் பெரியகுளம் தீயணைப்பு வாகனம் வருவதற்கு முன்பாக பெரும்பாலும் பொதுமக்களே தீயை அணைத்து கட்டுப்படுத்திய நிலையில் தீயணைப்புத் துறையினர் வந்து தீ பற்றிய வீட்டில் முழுமையாக நீரை பாய்ச்சி அடித்து தீயை கட்டுப்படுத்தினர்.
மேலும் தீ பற்றியவுடன் அங்கு இருந்த மின்வாரிய பணியாளர்கள், மின் வயிர்கள் மூலம் தீ பரவாமல் இருக்க மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இந்த தீ விபத்தில் வீட்டிலிருந்த பொருட்கள் எரிந்து சேதம் அடைந்தது. மேலும் இந்த தீ விபத்து குறித்து பெரியகுளம் தென்கரை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.