திருவண்ணாமலை அருகே பாத்திர கடையில் கைவரிசை காட்டிய மர்மநபர் - pottery shop
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/14-08-2023/640-480-19261574-thumbnail-16x9-tvm.jpg)
திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் அடுத்த சிறுநாத்தூர் பகுதியில் அக்பர் என்பவர் தகர சீட்டினால் கட்டப்பட்ட SPS பாத்திர கடை நடத்தி வருகிறார். இக்கடையில் கட்டில், பீரோ, பாத்திரங்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் விற்பனை செய்து வருகிறார். நேற்று (ஆகஸ்ட் 13ஆம் தேதி) வழக்கம் போல் அக்பர் கடையில் வேலையை முடித்து விட்டு, கடையில் ரூபாய் 8,150 வைத்து கடையை பூட்டி விட்டு சென்றுள்ளார்.
இந்நிலையில், நேற்று நள்ளிரவில் கடையின் பின்பக்கம் உள்ள தகர சீட்டினை கழட்டிவிட்டு உள்ளே புகுந்து கடையில் இருந்த பணத்தினை மர்ம நபர் ஒருவர் திருடிச் சென்றுள்ளார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அக்பர் கீழ்பென்னாத்தூர் காவல் நிலைய போலீசாருக்கு புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
கடையில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் மர்ம நபர் கடைக்குள் வருந்து கடையில் இருக்கும் பணத்தை திருடி செல்லும் காட்சி பதிவாகி இருந்தது. இந்த சிசிடிவி காட்சிகளை கைபற்றி, அதனை கொண்டு மர்ம நபரை தேடி வருகின்றனர்.