மாநில அளவிலான திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி; முதலிடம் பிடித்த புதுக்கோட்டை மாணவி - கலைத்திருவிழா
🎬 Watch Now: Feature Video
புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அருகே உள்ள செரளப்பட்டி, ஊராட்சி ஒன்றிய நடுநிலைபள்ளியில் 7ஆம் வகுப்பு பயிலும் ராஜ ஹரிணி என்ற மாணவி மாநில அளவில் நடைபெற்ற கலைத்திருவிழாவில் திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியில் முதலிடம் பிடித்துள்ளார். இதேபோல் கடந்த வாரம் விராலிமலை அருகே உள்ள சூரியூர் அரசு பள்ளியில் படித்த மணிகண்டன் என்ற மாணவன் கலைத்திருவிழாவில் களிமண்ணில் பாரத தாயின் உருவத்தை செய்து முதலிடம் பிடித்தார். தற்போது புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் அரசுப்பள்ளி மாணவர்கள் கலைத்திருவிழாவில் களிமண் போட்டி மற்றும் திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியில் முதலிடம் பிடித்தது அப்பகுதி மக்களை உற்சாகமடைய செய்துள்ளது.
Last Updated : Feb 3, 2023, 8:38 PM IST