தக்காளி விலை குறைய வேண்டி 508 தக்காளிகளால் மாலை அணிவித்து சிறப்பு பூஜை! - Sri Maha Mariamman Temple
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/02-08-2023/640-480-19160085-thumbnail-16x9-tomato.jpg)
நாகப்பட்டினம்: திருக்குவளை அடுத்துள்ள காருக்குடி பிரசித்தி பெற்ற ஸ்ரீ மகா மாரியம்மன் மற்றும் நாகம்மன் ஆலயம் அமைந்துள்ளது. இவ்வாலயத்தில் ஆடி மாத பௌர்ணமியை முன்னிட்டு, சிறப்பு யாக பூஜை வெகு விமரிசையாக நடைபெற்றது. மேலும், இக்கோயிலில் திருமணத்தடை, குழந்தை பாக்கியம் கல்வி மற்றும் செல்வம் ஆகியவை பெறுக வேண்டிச் சிறப்புப் பரிகார பூஜையும் நடைபெற்றது. பின்னர், கடம் புறப்பாடாகி அம்மனுக்குச் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
அதன்பின், தற்பொழுது வரலாறு காணாத அளவிற்கு கிடுகிடுவென உயர்ந்து வரும் தக்காளி விலையால் அடித்தட்டு ஏழை, எளிய மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் தக்காளியின் விலை குறைய வேண்டி, அம்மனுக்கும், மதுரை வீரனுக்கும் தனித்தனியே 508 தக்காளிகள் கொண்ட மாலை அணிவித்துச் சிறப்புப் பிரார்த்தனை மேற்கொள்ளப்பட்டது.
மேலும், அம்மனுக்கு மலர் மாலை, எலுமிச்சை மாலையுடன் சேர்த்து தக்காளியையும் மாலையாக அணிவித்த நிகழ்வு பலரது கவனத்தையும் வெகுவாக ஈர்த்துள்ளதோடு தக்காளியின் விலை உச்சம் தொட்டதையும் எடுத்துரைக்கும் விதமாக அமைந்து உள்ளது. இதனைத்தொடர்ந்து அம்மனுக்கு மாலையாக அணிவிக்கப்பட்ட தக்காளி கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அருட்பிரசாதமாக வழங்கப்படுகின்றது. இதில் நாகை, திருவாரூர், காரைக்கால், மயிலாடுதுறை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்று அம்மனை தரிசனம் செய்தனர்.