டயர் தொழிற்சாலையில் தீ விபத்து: பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசம்.! - டயர் தொழிற்சாலை
🎬 Watch Now: Feature Video
பூண்டி: திருவள்ளூர் மாவட்டம் பூண்டி அருகே பிரபல டயர் தொழிற்சாலையில் தீ பற்றி எரிந்து பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் தீயிக்கு இறையாகின. பூண்டி அருகே கோஹிடெக் டயர் தொழிற்சாலை இயங்கி வருகிறது. கடந்த 10 வருடங்களுக்கு மேலாக இயங்கி வரும் இந்த தொழிற்சாலையில், நூற்றுக்கணக்கான ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இங்கு பிரபல நிறுவனங்களுக்கு டயர் டையிங் தயாரிக்கப்பட்டு அனுப்பப்படுகிறது. இந்நிலையில் இங்கு இன்று காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தொழிற்சாலையின் ஒரு பகுதியில் பிடித்த தீ மளமளவென அடுத்த பகுதிகளுக்கும் பரவியுள்ளது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத்துறை வீரர்கள் சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.
இதனால் அந்த பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்து காட்சியளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறை அதிகாரிகள் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இதனால் அங்கு சற்று பரபரப்பான சூழல் நிலவியது.
இதையும் படிங்க: உச்சநீதிமன்ற நீதிபதி குறித்து அவதூறு பேச்சு: பத்ரி சேஷாத்ரி திருச்சி மத்திய சிறையில் அடைப்பு!