உயிரிழந்த பெண் காவலர் குடும்பத்தினருக்கு ரூ.24 லட்சம் நிதி உதவி வழங்கிய 6000 காவலர்கள்! - 6000 constables who provided financial assistance
🎬 Watch Now: Feature Video
திருப்பத்தூர்: வாணியம்பாடி அருகே உள்ள ஆலங்காயம் பகுதியைச் சேர்ந்தவர் லட்சுமி. இவருக்கு திருமணம் ஆகிய மூன்று ஆண் பிள்ளைகள் உள்ள நிலையில் கணவர் சிற்ப கலைஞராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் லட்சுமி காவலூர் காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வந்தார்.
இத்தகைய சூழ்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல்நலக்குறைவால் லட்சுமி உயிரிழந்துள்ளார். இதனை அடுத்து, 2009 ஆம் ஆண்டில் லட்சுமியுடன் காவலர் பயிற்சி பெற்ற 6000 காவலர்கள் தற்போது தமிழ்நாடு முழுவதும் பணியாற்றி வரும் நிலையில் அவர்கள் டெலிகிராம் ஆன்லைன் செயலி மூலம் லட்சுமி இறந்ததை அறிந்து அனைவரும் ஒன்றிணைந்து காவலர் லட்சுமியின் குடும்பத்தினருக்கு சுமார் 24 லட்சத்து 25 ஆயிரத்து 703 ரூபாய் நிதியை லட்சுமியின் குடும்பத்தினரிடம் இன்று (ஆகஸ்ட் 06) வழங்கினர்.
உடல்நலக்குறைவால் உயிரிழந்த பெண் காவலரின் குடும்பத்தினருக்கு அவருடன் காவலர் பயற்சி பெற்ற அனைத்து காவலர்களும் சேர்ந்து நிதி உதவி வழங்கிய நிகழ்வு வாணியம்பாடி சுற்றுவட்டாரப் பகுதி மக்களிடையே பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.