களைகட்டிய 'ஆவிளிபட்டி மீன்பிடி திருவிழா'.. 10 கிலோ எடையிலான மீன்களை பிடித்து மக்கள் கொண்டாட்டம்! - avilipatti thiruvizha
🎬 Watch Now: Feature Video
திண்டுக்கல்: நத்தம் சாணார்பட்டி அருகே உள்ள ஆவிளிபட்டி கிராமத்தில் சுமார் 150 ஏக்கர் பரப்பளவில் குமரிக்குண்டு குளம் உள்ளது. கடந்த ஆண்டு பெய்த மழையால் குளம் முழுமையாக நிரம்பி ஒன்றரை வருட காலம் விவசாய பயன்பாட்டிற்கு தண்ணீர் இருந்து வந்த நிலையில் தற்போது குளத்தில் தண்ணீர் குறைவாக உள்ளது.
இதனால் இந்த குளத்தில் உள்ள மீன்களை பொதுமக்கள் பிடித்து செல்ல ஊரின் சார்பில் மீன்பிடி திருவிழா நடத்த முடிவு செய்து சுற்றி உள்ள கிராமங்களுக்கும் தகவல் அளித்தனர். இதையடுத்து நத்தம், சாணார்பட்டி, கோபால்பட்டி, செங்குறிச்சி, சிறுகுடி, சிலுவத்தூர், செந்துறை, பண்னப்பட்டி, ராஜாக்காபட்டி ஆகிய பகுதிகளில் இருந்து மக்கள் வருகை தந்தனர்.
மேலும் புதுக்கோட்டை, மதுரை, மேலூர், சிங்கம்புணரி, பொன்னமராவதி உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட வெளிமாவட்ட பகுதிகளில் இருந்தும் சுமார் 500 மேற்பட்டவர்கள் இருசக்கர வாகனங்களில் மீன்பிடி திருவிழாவிற்கு வருகை தந்தனர். சிறுவர்கள், பெரியவர்கள், பெண்கள், இளைஞர்கள் என ஏராளமானோர் போட்டி போட்டுக் கொண்டு குளத்தில் இறங்கி ஊத்தா கூடை கொண்டு ஒற்றுமையாக மீன்களை பிடித்தனர்.
இதில் இவர்களுக்கு கட்லா, ஜிலேபி, கெளுத்தி, கெண்டை, பாறை உள்ளிட்ட பல்வேறு வகையான மீன்கள், ஒரு கிலோ முதல் 10 கிலோ வரை எடை உள்ள மீன்களும் கிடைத்தன. மீன் பிடி திருவிழாவில் கிடைத்த மீன்களை கிராம மக்கள் மகிழ்ச்சியுடன் வீடுகளுக்கு எடுத்து சென்றனர்.