ஆதரவற்ற 2040 சடலங்களுக்கு நல்லடக்கம் செய்த சமூக சேவகர் மணிமாறன்!
🎬 Watch Now: Feature Video
வேலூர்: திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த சமூக சேவகர் மணிமாறன் நேற்று (மே 18) இறந்து பல மாதங்களாகியும், ஆதரவற்ற நிலையில் யாரும் உரிமை கோராமல் இருந்த 4 ஆண்கள் மற்றும் 1 பெண் உட்பட 5 சடலங்களை, வேலூர் பாலாற்றங்கரையில் உள்ள மயானத்தில் காவல்துறையினரின் அனுமதியுடன், அனைத்து சடங்குகளையும், மலர்த் தூவி தனது சொந்த செலவில் நல்லடக்கம் செய்துள்ளார்.
மேலும், சமூக சேவகர் மணிமாறன் கரோனா காலகட்டத்தில் பல உயிரிழப்புகள் ஏற்பட்டு கேட்பார் எவரும் இன்றி ஆதரவற்ற நிலையில் இறந்தவர்களின் சடலங்களையும், அந்தந்த ஊருக்கு அல்லது மாவட்டத்திற்கே சென்று அவரவர் மத முறைப்படி தனது சொந்த செலவில் சடங்குகளை செய்து நல்லடக்கம் செய்துள்ளார்.
இதுவரையில், சமூக சேவகர் மணிமாறன் 2040 ஆதரவற்றோரின் சடலங்களை, அவர்களின் ஆன்மா சாந்தியடைய வேண்டும் என்ற நோக்கில், அவரவர் மத முறைப்படி நல்லடக்கம் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இது குறித்து மணிமாறனிடம் கேட்ட போது, அவர் ஆதரவற்று, பிள்ளைகளால் கைவிடப்பட்ட முதியோர் என உரிமைகோரி வராத சடலங்களை, அவர்கள் மத அடிப்படையிலேயே நல்லடக்கம் செய்வதாகவும், மேலும் இது போன்று பெற்றோர்களை தெருக்களில் ஆதரவற்ற நிலையில் விட வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டார்.
இதையும் படிங்க: உழைக்கும் தொழிலாளர்களுக்கான அரசாக திராவிட மாடல் அரசு திகழ்கிறது - முதலமைச்சர் ஸ்டாலின்