ஓவிய காவலன் அசோக் குமார்! - Ashok Kumar
🎬 Watch Now: Feature Video
பஞ்சாப் காவலர்கள் இறுகிய மனம் படைத்தவர்கள், கடினமான அணுகுமுறை கொண்டவர்கள் என்ற குற்றச்சாட்டு இருந்துவருகிறது. இதற்கு மத்தியில் சில காவலர்கள் தன் திறமையை வெளிக்கொணர்ந்து, சொந்த அடையாளத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். அத்தகைய ஒரு காவலரைதான் நாம் பார்க்க போகிறோம். அவர் ஒரு சிறந்த ஓவியர். தனது ஓவியங்கள் மூலம் மக்களை கவர்ந்துவருகிறார். அவர்தான் ஜலந்தர் காவல் நிலையத்தில் பணிபுரியும் மூத்த தலைமை காவலர் அசோக் குமார். இவரின் பெயர் இந்தியா புக் ஆஃப் ரெக்கார்டில் ஒரு முறை அல்ல, மூன்று முறை இடம்பெற்றுள்ளது. அசோக் குமார் குறித்து பார்க்கலாம்...