"வேணும்னே இங்கிலீஷில் பேசமாட்டேங்குறார்..." மோடியை கலாய்த்த ட்ரம்ப் - trump modi G7 bilateral meet
🎬 Watch Now: Feature Video
பிரான்ஸில் நடைபெற்றுவரும் ஜி7 உச்சிமாநாட்டில் கலந்துகொண்ட பிரதமர் மோடியும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பும் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இந்தியில் செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் மோடியைப் பார்த்து அதிபர் ட்ரம்ப், "இவருக்கு நல்லா இங்லீஷ் பேசத் தெரியும். ஆனால் வேண்டுமென்றே இந்தியில் பேசுகிறார்" என்றார்.
இதனால் குஷியான மோடி, ட்ரம்ப்பின் கையைப் பிடித்து குலுங்கக் குலுங்க சரித்தார். இதனால் அந்த அறையில் சிரிப்பலை எழுந்தது.