நெல்கொள்முதல் நிறுத்தப்பட்டதினால் விவசாயிகள் அவதி - அரசு நேரடி நெல்கொள்முதல்
🎬 Watch Now: Feature Video
மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த 27ஆம் தேதி திறக்கப்பட்ட திருக்கடையூர் நேரடி கொள்முதல் நிலையத்தில் நேற்று முன்தினம் (ஜனவரி 31) நெல்லை கொள்முதல் செய்யாமல் மீண்டும் ஆன்லைனில் பதிவு செய்துவிட்டு வரச்சொல்வதாக விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர். நெல்தூற்றும் இயந்திரம் மீண்டும் பழுது ஏற்பட்டதால் நேற்றும் (பிப்ரவரி 1) கொள்முதல் நிறுத்தப்பட்டது. உடனடியாக இயந்திரத்தைப் பழுதுநீக்கம் செய்து முன்பதிவு செய்து டோக்கன் பெற்ற விவசாயிகளை அலைகழிக்காமல் கொள்முதல் செய்ய நுகர்பொருள் வாணிபக் கழக அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.