Watch Video: கைதிகள் விளைவித்த தர்பூசணி பழங்கள்: மதுரை சிறையில் விற்பனை தொடக்கம் - கைதிகள் விளைவித்த தர்பூசணி பழங்கள்
🎬 Watch Now: Feature Video
மதுரை மத்திய சிறைச்சாலை தென் மாவட்டங்களிலேயே மிகப்பெரியதும் முக்கியத்துவம் வாய்ந்ததும் ஆகும். மதுரை மத்திய சிறை நிர்வாகத்தின்கீழ், காளையார்கோவில் ஊரில் திறந்தவெளி சிறைச்சாலை செயல்பட்டு வருகிறது. இங்கு சுமார் 84 ஏக்கரில் 100 கைதிகள் மூலம் வாழை,தென்னை நெற்பயிர் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. இங்கு உற்பத்தியான தர்பூசணி கைதிகள் மூலம் விளைவிக்கப்பட்டது. அடுத்தகட்டமாக கொய்யா, மா, எலுமிச்சை உள்ளிட்டப் பழங்களும் விற்பனைக்கு கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளதாக சிறைத்துறை நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தென் மாவட்டத்தில் முதன்முறையாக சிறைக்கைதிகளால் விளைவிக்கப்பட்ட பழங்கள் நேரடியாக பொதுமக்கள் விற்பனைக்கு வருவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
Last Updated : Feb 3, 2023, 8:19 PM IST