நாவிற்கு சுவை, உடலுக்கு வலு; சாப்பிடலாம் வாங்க எறும்பு சட்னி! - chutney called Chaprah dishes
🎬 Watch Now: Feature Video

அசைவம், சைவம் என்பதையும் தாண்டி இந்திய உணவுகள் பிரமிப்பானவை. சத்தீஸ்கர் மாநிலம் பஸ்தரில் ஒருவகை சட்னி, விற்பனையில் சக்கைப்போடு போடுகின்றது. இது சுவையுடன் மருத்துவ குணமும் கொண்டது. இம்மக்கள் இந்த சட்னிக்கு அடிமை. காரணம், இந்தச் சட்னி சுவையுடன் மருத்துவ தேவையையும் பூர்த்தி செய்கிறது. இதனால் ஜக்தால்பூர் சந்தையில் இந்தச் சட்னிக்கு கடும் கிராக்கி. இதனை அப்பகுதி மக்கள் சப்தா என்று அழைக்கின்றனர். இது, அந்தப் பழங்குடியின மக்களின் வருவாய்க்கும், வாழ்வாதாரத்துக்கும் அடித்தளமாக திகழ்கிறது.