தேங்காய் பூஜை செய்து மழையை நிறுத்திய திமுகவினர்.. சிவகங்கையில் நடந்தது என்ன? - coconut worship
🎬 Watch Now: Feature Video
சிவகங்கை: சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரியில் திமுக சார்பில் முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள், கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தென்னிந்திய அளவில் பெண்களுக்கான கபடி போட்டி நடத்த மின்னொளி மைதானம் பிரம்மாண்டமாக தயார் செய்யப்பட்டது.
இதில் கர்நாடகா, பாண்டிச்சேரி, தமிழ்நாடு உள்ளிட்ட 18 அணிகள் பங்கேற்றனர். முதல் நாள் கபடி போட்டி நடத்தப்பட்ட நிலையில் 2-வது நாள் மழை பெய்ததால் போட்டி தாமதாக தொடங்கியது. இதனால் நிறைவு போட்டிகள் நடத்தப்படாமல் 3-வது நாளுக்கு தள்ளி வைக்கப்பட்டது.
இந்நிலையில் மீண்டும் மழை பெய்ததால் நிகழ்ச்சி ரத்து செய்யப்படும் சூழல் உருவானது. அதனால் உள்ளுர் திமுகவினர் பயந்து போய் மழையை நிறுத்தும் விதமாக பாரம்பரிய வழக்கப்படி தேங்காய் வழிபாடு செய்து நிகழ்ச்சி நடக்கும் கூரைக்கு மேல் தேங்காயை தூக்கிப் போட்டனர்.
திமுகவினரின் வேண்டுதல் பலித்ததோ என்னவோ வழிபாட்டுக்கு பிறகு மழை நின்று நிகழ்ச்சிகள் நடத்தி முடிக்கப்பட்டது. இந்நிலையில் பகுத்தறிவு பேசும் திமுகவினரே இந்த வழிபாட்டை நடத்தி மழையை நிறுத்த முயன்ற செயல் நகைப்புக்கு உள்ளாகி வருகிறது.
திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்கும்போது மழை வருவது போல் இருந்தால் ஒரு தேங்காயை எடுத்து வருண பகவானை வேண்டி கூரையில் போட்டு விட்டால் அன்று மழை பெய்யாது என்பது தமிழகத்தில் பரவலாக நம்பப்படும் விஷயம் என்பது குறிப்பிடத்தக்கது.
வெயிலின் தாக்கம் அதிகரித்து விவசாயிகள் மழையை எதிர்பார்த்து காத்திருந்த சமயத்தில், திமுகவினர் சுயநலமாக சிந்தித்து தங்கள் கட்சி நிகழ்ச்சி நடைபெற மழை வேண்டாம் என்று பூஜை நடத்தியதாகவும் ஒரு தரப்பினர் விமர்சனம் செய்து வருகின்றனர்.
இதையும் படிங்க: சிவகங்கை பாண்டியன் கோட்டையில் முன்னுரிமை அடிப்படையில் அகழாய்வு: தொல்லியல் துறை