வனத்துறையினரை விரட்டிய காட்டு யானை - வைரல் வீடியோ - வனத்துறையினரை தாக்கிய காட்டு யானை
🎬 Watch Now: Feature Video
கோயம்புத்தூர்: ஆனைமலை புலிகள் காப்பகம் பொள்ளாச்சி வனச்சரகம் நவமலை சாலையில் கடந்த 13ஆம் தேதி காட்டு யானை ஒன்று, 2 கார்களை தூக்கி வீசியது. இதில் ஒருவர் காயமடைந்தார். இந்நிலையில், உயர் அதிகாரிகளின் உத்தரவின்படி வனத்துறையினர் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள், காட்டு யானைக்கு மஸ்து குறைக்கும் வகையில் தண்டு உணவு அளிக்க முயற்சித்தனர். அப்போது வனத்துறையினரின் வாகனத்தை தாக்க யானை முற்பட்டது. இதையடுத்து யானையை அடர் வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் வனத்துறையினர் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
Last Updated : Feb 3, 2023, 8:19 PM IST