Video: கரும்புத்தோட்டத்தில் புகுந்த 12அடி நீள மலைப்பாம்பு - python caught at reddymanguppam in Tirupathur district
🎬 Watch Now: Feature Video
Video: திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த ரெட்டிமாங்குப்பம் பகுதியைச் சேர்ந்த சந்தோஷ் என்பவருக்குச் சொந்தமான நிலத்தில் கரும்பு பயிரிடப்பட்டு உள்ள நிலையில் கரும்பு அறுவடையின்போது இன்று மாலை பணியாளர்கள் ஈடுபட்டு கொண்டு இருந்தனர். அப்போது கரும்பு தோட்டத்தில் சுமார் 12அடி நீளமுள்ள மலைப்பாம்பு ஊர்ந்து செல்வதைப் பார்த்த பணியாளர்கள் அங்கிருந்து அலறி அடித்து ஓட்டம் பிடித்துள்ளனர். பின்னர் இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையினர் கரும்புத்தோட்டத்தில் பதுங்கி இருந்த, சுமார் 12அடி நீள மலைப்பாம்பை 1மணி நேரம் தேடி லாவகமாகப்பிடித்து, ஆம்பூர் அருகே உள்ள பாதுகாக்கப்பட்ட காப்பு காட்டில் விட்டனர். ஆம்பூர் அருகே கரும்புத்தோட்டத்தில் 12 அடி நீள மலைப்பாம்பு புகுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது