கழுத்தில் ருத்ராட்சம், கையில் சிலுவை, தலையில் குல்லா.. சுயேச்சை வேட்பாளரின் பரப்புரை பாணி - Kinathukadavu Independent candidate Noor Mohammad
🎬 Watch Now: Feature Video

கோவை கிணத்துக்கடவு சட்டப்பேரவை தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடுகிறார் நூர் முகமது. பல முறை தேர்தலில் போட்டியிட்டு குறைந்த வாக்குகளை பெற்ற இவர் இம்முறையும் மனம் தளராமல் மீண்டும் பரிசு பொருள் சின்னத்தில் போட்டியிடுகிறார். கழுத்தில் ருத்ராட்சம் மாலை, தலையில் குல்லா, ஒரு கையில் சிலுவை, மற்றோரு கையில் உடுக்கை என வித்தியாசமான தோற்றத்துடன் இவர் போத்தனூர் பகுதியில் பரப்புரை மேற்கொண்டார். எம்மதமும் சம்மதம் என்பதே வலியுறுத்தவே இவ்வாறு பரப்புரையில் ஈடுபட்டதாகவும் அவர் தெரிவித்தார்.