'அந்த எண்ணத்தில்தான் செந்தில் பாலாஜியை கோவை மாவட்டத்திற்கு பொறுப்பு அமைச்சராக நியமித்துள்ளேன்' - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - அந்த எண்ணத்தில் தான் அமைச்சர் செந்தில் பாலாஜியைக் கோவை மாவட்டத்திற்கு பொறுப்பு அமைச்சராக நியமித்துள்ளேன்
🎬 Watch Now: Feature Video
கோயம்புத்தூர் வ.உ.சி. மைதானத்தில் நடைபெற்ற அரசு விழாவில் பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், "தொண்டர்களின் வரவேற்பு காரணமாக சுமார் 3 மணி நேரம் தாமதமாக மேடைக்கு வரவேண்டியதாயிற்று. லேட்டா வந்தாலும் லேட்டஸ்டாக வந்துள்ளேன். சட்டப்பேரவை தேர்தலின் போது பெருவாரியான இடங்களில் வென்றிருந்தாலும், கோவையில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை. திமுக ஆட்சி இருக்கும் வரை ஓட்டுப் போடாதவர்களுக்கும் சேர்த்தே உழைப்போம். அந்த எண்ணத்தில் தான் அமைச்சர் செந்தில் பாலாஜியைக் கோவை மாவட்டத்திற்கு பொறுப்பு அமைச்சராக நியமித்துள்ளேன்” என்றார்