கடம்பூர் மலைப்பகுதியில் 2 கன்றுக்குட்டிகளை ஈன்ற காராம் பசு - cow calving 2 calves in Kadampur hills
🎬 Watch Now: Feature Video
ஈரோடு: சத்தியமங்கலம் அடுத்த கடம்பூர் மலைப்பகுதியில் சின்னசாலட்டி கிராமம். இக்கிராமத்தைச் சேர்ந்த முத்துச்சாமி என்பவர் தனது தோட்டத்தில் 7 மாடுகள் பராமரித்து வருகிறார். இவர் வளர்த்த மாடுகளில் ஒன்றான காராம் பசு, இரண்டு கன்றுகளை ஈன்றுள்ளது. அதில் ஒன்று காளை கன்றாகவும் மற்றொன்று கிடாரி கன்றாகவும் இருக்கிறது. துள்ளி விளையாடும் இந்த கன்று குட்டிகளை அப்பகுதியினர் ஆர்வத்துடன் பார்த்து மகிழ்கின்றனர்.