VIRAL: பூனை என நினைத்து புலியைப் பிடித்த பிரபலம்! - காங்கிரஸ்
🎬 Watch Now: Feature Video
'கயிரென நினைத்து பாம்பை பிடித்தார்' எனக் கதைகளில் நாம் கேட்டதுண்டு. அதேபோல் சம்பவம் ஒன்று பிரபலம் ஒருவருக்கு நடந்துள்ளது. அவர் பாம்பை பிடிக்கவில்லை, மாறாக பூனை என நினைத்து சிறுத்தைப் புலியை தூக்கியுள்ளார்.
ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் செய்தித்தொடர்பாளர் கொண்டா ராகவரெட்டி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக தெலங்கானா ரங்காரெட்டி மாவட்டம் நஹ்கலப்பள்ளி கிராமம் வழியாக காரில் சென்றுகொண்டிருந்தார்.
அப்போது, சாலையின் நடுவே பானை தலையில் சிக்கிய நிலையில் நடந்து சென்ற பூனை ஒன்றை கண்டார். இதையடுத்து பூனையின் தலையில் சிக்கியிருந்த பானையை விடுவிக்க எண்ணி, ஓடிச் சென்று அந்தப் பூனையை தூக்கினார்.
அதை கொஞ்சும் முனைப்பில் தூக்கிய அவருக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது. கையில் இருப்பது பூனையல்ல, புலி.. சிறுத்தைப் புலி என்றுணர்ந்த அவர், உடனடியாக அப்படியே விட்டு பயம் கலந்த இறுக்கமான முகத்துடன் திரும்பினார். இந்தக் காணொலிக் காட்சிகள் தற்போது வைரலாகிவருகின்றன.