அனில் தேஷ்முக்குக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டு...மக்களவையில் சலசலப்பு! - மகாராஷ்டிரா கூட்டணி ஆட்சி
🎬 Watch Now: Feature Video
டெல்லி: மாதந்தோறும் நூறு கோடி ரூபாய் வசூல் செய்து கொடுக்கும்படி வற்புறுத்தியதாக மகாராஷ்டிரா உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக்குக்கு எதிராக முன்னாள் மும்பை காவல் ஆணையர் பரம்பீர் சிங் பரபரப்பு குற்றச்சாட்டு சுமத்தினார்.
இச்சம்பவம் மக்களவையில் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், காங்கிரஸ் கட்சியின் ரவ்நீத் சிங், சுயேச்சை உறுப்பினரான நவநீத் ரவி ராணா, பாஜகவின் பிபி சவுத்ரி, பூனம் மகாஜன் ஆகியோருக்கிடையே நாடாளுமன்றத்தில் கடும் விவாதம் நடைபெற்றது.
காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் - சிவசேனா கூட்டணி ஆட்சிக்கு எதிராக கடும் விமர்சனம் முன்வைக்கப்பட்டது.