விடைபெறும் குலாம் நபி ஆசாத் - கண்கலங்கிய பிரதமர் மோடி! - குலாம் நபி ஆசாத்
🎬 Watch Now: Feature Video

காங்கிரஸ் மூத்தத் தலைவர் குலாம் நபி ஆசாத்தின் பதவிக்காலம் பிப்ரவரி 15ஆம் தேதியுடன் முடிவடைகிறது. மாநிலங்களவையில் அவருக்குப் பிரியாவிடை அளித்த பிரதமர் நரேந்திர மோடி, கண்கலங்கிப் பேசினார். அவரின் 28 ஆண்டுகால அனுபவத்திற்கு ஈடு கொடுப்பது மிகக் கடினம் என்றும் மக்கள், நாடாளுமன்றம், நாடு ஆகியவற்றின் மீது தொடர்ந்து கவனம் செலுத்திவந்தவர் ஆசாத் என்றும் மோடி புகழாரம் சூட்டினார்.