‘காரிலிருந்து விழுந்த குழந்தை... கவனிக்காத பெற்றோர்’ - வைரல் காணொலி - கவனிக்காத பெற்றோர்
🎬 Watch Now: Feature Video

கேரளாவில் ஒன்றரை வயதுக் குழந்தை ஒன்று காரில் இருந்து தவறி விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ஆழ்ந்த உறக்கத்திலிருந்த தாயின் மடியில் அமர்ந்திருந்த குழந்தை, இடுக்கி மலைப்பாதை வளைவில் கார் திரும்பும்போது சாலையில் விழுந்துள்ளது. சில மணி நேரங்கள் கழித்து இதனைக் கண்ட வனத்துறை அலுவலர்கள், குழந்தையை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
50 கிமீ தொலைவு கடந்து சென்ற பின் விழித்துப் பார்த்தபோதுதான் குழந்தை தவறியதைப் பெற்றோர் உணர்ந்துள்ளனர். உடனடியாக காவல்நிலையத்தை அணுகி புகார் கொடுத்துள்ளனர். இதனையடுத்து குழந்தையை மருத்துவமனையிலிருந்து பெற்றோரிடம் ஒப்படைத்தனர். சாலையில் விழுந்த குழந்தை தவழ்ந்து செல்லும் சிசிடிவி காட்சிகள், சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.