வாடிக்கையாளர்களுக்கு உணவு பரிமாறும் ரோபோ செஃப்! - ஹோட்டலில் வடிக்கையாளர்களுக்கு உணவு பரிமாறும் ரோபோ செஃப்
🎬 Watch Now: Feature Video
ஒடிசா மாநிலம் புவனேஷ்வரில் உள்ள ஒரு உணவகம் ஒன்றில் முதன்முறையாக வாடிக்கையாளர்களுக்கு உணவு வழங்க இரண்டு ரோபோ செஃப்பை அறிமுகப்படுத்தியுள்ளனர். இந்த இரண்டு ரோபோக்களும் ரேடார் சிக்னல்கள் மூலம் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. பல்வேறு மொழிகளையும் பேசும் வகையிலான கட்டளைகளுடன் செயல்படும் இந்த ரோபோக்கள் இந்தியாவில் தயாரிக்கப்பட்டவையாகும். இதற்கு சம்பா மற்றும் சமேலி என்று பெயர் வைத்துள்ளனர். இவையிரண்டும் பரிமாறுவதை பார்ப்பதற்காகவே பலரும் அந்த உணவகத்திற்கு வருகைபுரிகின்றனர்.