புகழ்பெற்ற கைரதாபாத் விநாயகர் சிலை ஏரியில் கரைப்பு - கைரதாபாத் விநாயகர் சிலை
🎬 Watch Now: Feature Video
விநாயகர் சதுர்த்தி பண்டிகை நாடு முழுவதும் செப்.10ஆம் தேதி விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. இந்நாளில், இந்தியாவின் மிக உயரமான விநாயகர் சிலை ஹைதராபாத் நகரில் உள்ள கைரதாபாத்தில் ஆண்டுதோறும் பக்தர்களால் உருவாக்கப்பட்டு கொண்டாடப்படுவது வழக்கம்.
அதன்படி இந்த ஆண்டும் 40 அடி உயரத்தில் எழுப்பப்பட்ட விநாயகர் சிலை, வழிபாட்டுக்குப் பின் ஹுசைன் சாகர் ஏரியில் நேற்று (செப் 19) கரைக்கப்பட்டது.