டாக்டே புயல்: கேரளாவில் 9 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் - கேரளாவில் டாக்டே புயல் தாக்கம்
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-11770930-45-11770930-1621081913936.jpg)
திருவனந்தபுரம்: டாக்டே புயல் காரணமாக கேரளாவில் பலத்த மழையும் கடலில் கொந்தளிப்பும் தொடர்ந்து நிலவி வருவதால், கேரளாவின் ஒன்பது மாவட்டங்களுக்கு ரெட் அலார்ட் விடுக்கப்பட்டுள்ளது. இடுக்கி, எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர், காசர்கோடு ஆகிய மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கையும் (ரெட் அலர்ட்) திருவனந்தபுரம், கொல்லம், பதனம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம் மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும் (ஆரஞ்ச் அலர்ட்) விடுக்கப்பட்டுள்ளது.