தென்காசியில் வைக்கோல் போர்கள் தீக்கிரை! - தென்காசி மாவட்ட செய்திகள்
🎬 Watch Now: Feature Video
தென்காசி: சாம்பவர் வடகரை பேருந்து நிலையம் அருகே சுமார் இரண்டு ஏக்கர் பரப்பளவில் வைக்கப்பட்டிருந்த வைக்கோல் போர்கள் நேற்றிரவு (மார்ச் 21) தீயில் எரிந்தன. இதுகுறித்து தகவலறிந்து வந்த தென்காசி, சுரண்டை, கடையநல்லூர், செங்கோட்டை, ஆலங்குளம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த தீயணைப்புத் துறையினர் நீண்ட நேரம் போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். சாம்பவர் வடகரை பகுதியைச் சேர்ந்த பொதுமக்களின் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான வைக்கோல் போர்கள் தீயில் எரிந்ததாக கூறப்படுகிறது. இந்த விபத்திற்கான காரணம் குறித்து சாம்பவர் வடகரை காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கு முன் 2 முறை அதே இடத்தில் தீ விபத்து ஏற்பட்டதாகவும் பொதுமக்கள் தெரிவித்தனர்.
Last Updated : Feb 3, 2023, 8:20 PM IST