கர்நாடகத்தின் ஹிஜாப் தடைக்கு எதிராக சென்னையில் 2ஆவது நாளாக மாணவர்கள் போராட்டம் - கர்நாடகா உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக மாணவர்கள் போராட்டம்
🎬 Watch Now: Feature Video
சென்னை: கர்நாடகாவில் (மார்ச் 15) கல்வி நிலையங்களில் ஹிஜாப்க்கு தடையை உறுதி செய்த கர்நாடக உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராகப் பல்வேறு இடங்களில் மாணவர்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக ஹிஜாப் அணிவதற்கான தடையை நீக்கக் கோரி, ராயப்பேட்டை நியூ கல்லூரி மாணவர்கள் இரண்டாவது நாளாக (மார்ச் 16) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு கோஷங்களை எழுப்பினர். இந்தத் தடையை விலக்கிக்கொள்ளும்வரை போராட்டம் தொடரும் என மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.
Last Updated : Feb 3, 2023, 8:20 PM IST