கோவையில் செஸ் போர்டு போன்ற உடை அணிந்த யானைகளின் அணிவகுப்பு! - யானை
🎬 Watch Now: Feature Video
கோவை மாவட்ட கள இயக்குநர் ராமசுப்பிரமணியம் உத்தரவின்படி ஆனைமலை புலிகள் காப்பகம், உலாந்தி வனச்சரகம், டாப்சிலிப்பில் உலக யானைகள் தினம், உலக பழங்குடியினர் தினம், மற்றும் உலக செஸ் விளையாட்டுப்போட்டியின் நிறைவு நாள் விழாவில் 'யானைகளின் செஸ் அணிவகுப்பு’ நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் செஸ் போர்டு போன்ற உடை அணிந்து யானைகள் அணிவகுப்பானது, சீத்தல் ஓய்வு விடுதியிலிருந்து டாப்சிலிப் வரவேற்பு மையம் வரை வந்து சதுரங்கப்பலகையை 5 முறை சுற்றி வந்தது. இதனை சுற்றுலாப் பயணிகள் ஆச்சர்யத்துடன் கண்டுகளித்து உற்சாகமாக இருந்தனர்.
Last Updated : Feb 3, 2023, 8:26 PM IST